Updates
திருமலை அறக்கட்டளைக்கு வரவேற்கிறோம்
திருமலை அறக்கட்டளை – தி.அ.க, “தொழில் வணிக நிறுவனங்கள் தமது சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றுவது கடமை; விருப்பத்திற்கு ஏற்ற விஷயம் அல்ல” என்ற தொலைநோக்கு பார்வையுடன் நிறுவப்பட்டது. 1970 ஆம் ஆண்டு கல்வி, சுகாதாரம், கிராமப்புற மக்களின் மேம்பாடு மற்றும் தீவிர மருத்துவ தேவைகள் உள்ள மக்களுக்கு உதவி அளித்தல் ஆகிய நோக்கங்களை கொண்டு நிறுவப்பட்டது.
தன் பொன்விழாவை கடந்த, தி.அ.க, தன் சேவை கிராமப்புற மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுவது குறித்து பெருமை கொண்டுள்ளது. அதன் அர்ப்பணிப்பு மற்றும் நடவடிக்கைகள் சுகாதாரம், கல்வி, பெண்கள் மேம்பாடு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி மற்றும் பல சேவைகளை உள்ளடக்கியது.
தத்துவம்
- கல்வி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும்.
- தன்னார்வத் தொண்டு, பெண்கள் மேம்பாடு, சமூகத்தின் முழு ஈடுபாடு ஆகியவை திட்டங்களின் வளர்ச்சிக்கு அவசியமாக திகழ்கிறது
- சுகாதார மேம்பாடு என்பது மருத்துவ சேவை அளிப்பவர், நோயாளி, குடும்பம் மற்றும் சமூகத்தின் பகிரப்பட்ட பொறுப்பு, நோயாளியின் சிகிச்சைக்கு ஏற்ற கவனிப்பை வழங்கும் ஒரு முறையான அணுகுமுறையும் அவசியம்.
தி.அ.க.-யின் பார்வை
தி.அ.க. இல் நிலையான சமூகங்களை உருவாக்குவதற்கு மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு எங்களை அர்ப்பணிக்க உறுதியளிக்கிறோம்.
- மாறிவரும் தேவைகளுக்கு பொருத்தமானதாகவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றதாகவும் அர்த்தமுள்ள திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குவது
- ஆரோக்கியம், கல்வி மற்றும் வளர்ச்சி ஆகிய ஒவ்வொரு திட்டங்களிலும் பிரதிபலிக்கக்கூடிய மற்றும் அளவிடக்கூடிய மாதிரிகளை உருவாக்குவதில் எமது கவனத்தை தொடருதல்
- கல்வி, பயிற்சி, தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களை நிறுவுதல், ஊக்குவித்தல் மற்றும் ஆதரித்தல்
- எங்கள் ஒவ்வொரு சேவையிலும் உயர்தர நிலையை அமைப்பதன் மூலம் அந்த சேவையை நாடுபவருக்கு இயற்கையான தேர்வாக அமைதல்
- சமூகத்தின் அனைத்து பிரிவினர் இடையேயும், குறிப்பாக இளைஞர்களிடம், சேவை மனப்பான்மையை வளர்ப்பது
தி.அ.க.யின் அர்ப்பணிப்பு
- 1970ல் தொடங்கப்பட்டதிலிருந்து கல்வி பாரம்பரியத்தை தொடருதல், புதிய நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் ஆதரித்தல்
- சமூக சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு சேவைகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் 1988 முதல் கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைத்தல்
- நிலையான சமூகங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கிராமப்புற மக்களை ஊக்கப்படுத்துதல்
- குறைந்த கட்டணத்தில், எளிதில் அணுகக்கூடிய ஒரு தனித்துவமான கிராமப்புற மற்றும் மருத்துவமனை சுகாதார மாதிரினய உருவாக்குதல் மற்றும் மருத்துவ சேவையை வழங்குதல்
- உள்ளூர் தலைவர்களுடன் சமூக அடிப்படையில் ஆன அமைப்புகளை உருவாக்குதல்
- அடிப்படை பணிகளுக்கு பெண் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து, ஊக்குவித்தல்
- சமூகத்தில் பயனாளர்களை முகவர்களாக மாற்றுவதன் மூலம் சிற்றலை விளைவுகளை உருவாக்குதல்
- 2010 முதல் எங்கள் திருமலை மிஷன் மருத்துவமனையில் (தி.மி.ம.) குறைந்த கட்டணத்தில் எளிதில் அணுக கூடிய மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்குதல்
- என். ஆர். சுவாமி நூற்றாண்டு மறுவாழ்வு மற்றும் நலவாழ்வு மையத்தில் குடிநோய் மற்றும் பிற பழக்கங்களுக்கு அடிமையாதல், வளரிளம் பருவத்தினருக்கு நலக்கல்வி மற்றும் மன நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகிய விரிவான சேவைகளை 2014 முதல் வழங்கி வருதல்
- திருமலை மிஷன் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி பிரிவு 2015 ஆம் ஆண்டிலிருந்து சமூகத்தில் பரவலாக நிலவும் பொதுவான உடல்நல பிரச்சனைகள் பற்றிய நுண்ணறிவு பெறுவதற்காக சமூக சுகாதார மற்றும் சமூகத்தில் பரவலாக உள்ள நோய்கள் குறித்த ஆராய்ச்சி ஆய்வுகளை நடத்தி வருதல்
- நோயாளிகளின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் வசதிக்கேற்ப வீடுகளில் இணைய வழி, ஆலோசனை, நர்சிங் சேவை, பிசியோதெரபி, இரத்த மாதிரி சேகரிப்பு மருந்துகள் விநியோகம் போன்றவை தி.மி.ம-யில் வீட்டு பராமரிப்பு சேவைகளாக 2020 முதல் செயல்பட்டு வருதல்
சட்ட ரீதியான தகுதி
தி.அ.க பதிவு செய்யப்பட்டுள்ளது
- பாம்பே பப்ளில் டிரஸ்ட்ஸ் சட்டத்தின் கீழ் ஒரு அறக்கட்டளை
- வருமான வரிச்சட்டத்தின் கீழ் ஒரு தொண்டு நிறுவனம்
- வெளிநாட்டு பங்களிப்புகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உள்ளது
- பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் உள்ளது
- தி.அ.க, பெரும் நன்கொடைகள் வருமான வரி சட்டத்தின் 80 ஜி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை