N.R.-Swamy_banner1

N. R. Swamy Rehab and Wellness Centre

Dr. Kabilan examines

தி.அ.க.யின் நிறுவனர்களில் ஒருவரான திரு. என்.ஆர். சுவாமியின் நூற்றாண்டு விழாவில் அவரது நினைவாக இந்த மையம் 2014-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது திருமலை மிஷன் மருத்துவமனையில் ஒரு தனி அம்சமாக செயல்படுகிறது. அதன் செயல்பாட்டிற்கு அனைத்து மருத்துவமனை சேவைகளின் ஆதரவையும் பெறுகிறது.

23 ஆண்டுகளாக கிராமங்களில் வருடாந்திர குடிபோதைக்கு அடிமையானவர்களுக்கான முகாம்கள் நடத்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தி.அ.க. சுயமாக மறுவாழ்வு மையத்தைத் தொடங்க எண்ணியது. ஒரு மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த ஆலோசகர்கள் குடிக்கு அடிமையானவர்களுக்கு 15 நாள் தங்கி சிகிச்சை பெறும் முறையில் சிகிச்சையளிக்கிறார்கள். சிகிச்சையானது போதைப்பொருளின் பல்வேறு அம்சங்களை அறிவுறுத்தும் வகையில் விரிவானது. சிகிச்சையின் போது வாழ்க்கைத் துணைவர்கள் தினசரி அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் அமர்வுகளில் கலந்துகொள்வது கட்டாயமாகும். சிகிச்சை பெற்ற நோயாளிகளின் நல்வாழ்வைக் கண்காணிக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பின்தொடர்தல் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

இந்த மையம் புகையிலை மற்றும் டிஜிட்டல் அடிமைத்தனத்தை கைவிடுவதற்கான ஆலோசனை மற்றும் சிகிச்சையையும் வழங்குகிறது. இம்மையம் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை வழங்குகிறது.

 

இது இளம் பருவத்தினரின் நடத்தைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது. மேலும் வழக்கமான கல்வி மற்றும் ஆலோசனைத் திட்டங்களுக்காக இப்பகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுடன் இணைந்து அப்பள்ளிகளுக்கு சென்று திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

போதை அடிமையாதல் மற்றும் வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகளுக்கு சென்னை, டி.டி.கே மருத்துவமனையின் பயிற்சி மற்றும் ஆதரவு ஆகியவற்றை இந்த மையம் பெரிதும் நம்புகிறது

சில மிதமான மனநல பிரச்சினையுடன் அடையாளம் காணப்பட்ட மருத்துவமனையின் நோயாளிகளிடையே ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சையையும் வழங்குகிறது. இந்நடவடிக்கைக்காக சென்னையிலுள்ள ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது.

திருமலை மிஷன் சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி அலகு

இது 2015-ஆம் ஆண்டிலிருந்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சமூக சுகாதார ஆய்வுகளை நடத்துவதற்கும், சமூகத்தில் பரவலாக காணப்படும் நோய்களின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி பெற்ற ஒரு தனி ஆராய்ச்சி அலகாகும். இது நிறுவன அறநெறிச் சபையின் மேற்பார்வையின் கீழ் செயல்படுகின்றது.

இது எலும்புத்தேய்மானம், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு ஆகியவற்றில் சில ஆய்வுகளை முடித்துள்ளது. இளம் குழந்தைகளிடையே செவித்திறன் குறைபாட்டைப் பரிசோதித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் குறித்த ஆய்வு ஒன்றையும் நடத்தி முடிந்துள்ளது.

தி.மி.ம. வீடுகளில் சேவை

இந்த சேவைகள் கொரோனா நோய்த் தொற்றுக்குத் தீர்வு காணும் விதமாக 2020-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டன. இந்த சேவை அருகிலுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாசிகளுக்கு வழங்கப்படுகின்றன, மேலும் இந்த சேவை சமூகத்தில் மிகவும் பயனுள்ளதாக உணர்ந்துள்ளனர்.

மருத்துவ ஆலோசகர்களுடன் டெலிமெடிசின் சேவை வழங்கப்படுகிறது. குறிப்பாக தொற்றுநோய்களின் போது மருத்துவமனைக்குச் செல்ல முடியாத வயதான மற்றும் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு குறிப்பாக டெலிமெடிசின் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான எங்கள் பராமரிப்பு திட்டங்களில் சேர்ந்துள்ள எங்கள் கிராமப்புற நோயாளிகளுக்கு இந்தச் சேவை நன்மை பயக்குகிறது.

ஆய்வுக்கூடம், செவிலியர் மற்றும் பிசியோதெரபி சேவைகள் மற்றும் மருந்தகப் பொருட்களும், பயனாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் வீடுகளுக்கே சென்று மக்களுக்கு தேவைக்கேற்ப வழங்கப்படுகின்றன.

திரு. S. சந்தானம்
திரு. S. சந்தானம் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் இரசாயன உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அல்ட்ராமரைன் மற்றும் பிக்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், திருமலை கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள இவர் பல்வேறு சமூக வளர்ச்சித் திட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் சர்வதேச மனிதாபிமான இயக்கத்தின் ஒரு குழு உறுப்பினராவார், மேலும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர தன்னார்வ நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தின் மேம்பாட்டிற்குத் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மும்பையின் வடாலாவில் உள்ள சமூகத்தை அணிதிரட்டி, சுற்றுப்புறத்தை பசுமையாக்குவதற்குப் பொறுப்பாக இருந்தார். உயர்நிலைப் பள்ளி, என்.ஆர். சுவாமி வணிகவியல் கல்லூரி மற்றும் திருமலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை நிர்வகிக்கும் தென்னிந்திய நலச்சங்கத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் அச்சுத் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். இவர் திருமலை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆவார்.
ta_INதமிழ்