Collaboration-Partners_banner

Collaboration Partners

திருமலை சேரிட்டி டிரஸ்ட் பல முன்னணி அமைப்புகள் தம்முடன் ஒத்துழைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக உள்ளது. 

இந்தக் குழுக்களின் ஆதரவுடன் TCT மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பணிக்கு மகத்தான மதிப்பைச் சேர்த்துள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களை நாங்கள் முக்கியமாக அங்கீகரிக்கிறோம்.

அல்ட்ராமரைன் அண்ட் பிக்மென்ட்ஸ் லிமிடெட்
UPL1

அல்ட்ராமரைன் அண்ட் பிக்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தொடக்கத்திலிருந்தே அதன் ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தத் தொடர்பினால் டி.சி.டி பல செயல் திட்டங்களை வடிவமைக்கவும் நிலைத்த தாக்கத்தையும் உருவாக்க முடிகிறது.

            http://www.ultramarinepigments.net/

திருமலை கெமிக்கல்ஸ் லிமிடெட்
TCT

திருமலை கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் நிதி உதவி வழங்குவதுடன், அவ்வப்போது ஆலோசனை சேவைகளையும் வழங்கி வருகிறது.

           http://www.thirumalaichemicals.com/

டி.டி.கே மருத்துவமன
ttk

டி.டி.ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (டி.டிகே மருத்துவமனை, சென்னை) 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு முன்னோடி மையமாகும் இது கடந்த இருபதாண்டுகளாக மது மற்றும் பிற போதைப்பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது. 

TCT.யின் மறுவாழ்வு திட்டங்களுக்கு டி.டி.கே நிறுவனம் ஒரு கருவியாக உள்ளது.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக TCT அலுவலர்களுக்கும் நாங்கள் பணியாற்றும் சமூகத்திற்கும் வலிமையாகவும் கட்டுப்பாடற்ற துணையாகவும் இருந்து வருகிறது. 

https://www.ttkhospital.com/

சி.எஸ் அறக்கட்டளை
CSF

சி.எஸ் அறக்கட்டளையின் நோக்கம், சமூகங்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவுவதற்கான அவர்களின் முயற்சியில் நம்பகமான உள்ளூர் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதாகும்.

சி.எஸ் அறக்கட்டளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக TCT-யின் முக்கிய ஆதரவாளர்களில் ஒன்றாகும். சி.எஸ் அறக்கட்டளையானது அயல் நாடுகளில் உள்ள உலக மக்கள் அனைவரிடமும் TCT-க்காக நிதி திரட்டுவதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது தாராளமான நிதியுதவியினால் எங்களால் தொடர்ந்து பணியாற்ற முடிகிறது.

                          http://cs-foundation.org/

இந்து மிஷன் மருத்துவமனை
hindu mission

இந்து மிஷன் மருத்துவமனை 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் லாபநோக்கமற்ற வகையில் தாம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது.

இந்து மிஷன் மருத்துவமனையுடன் இணைந்து TCT கண் மற்றும் இதய நோய் சார்ந்த பல முகாம்களை நடத்தியுள்ளது மருத்துவ மனையின் முதல் பகுதி கட்டும்போதும் பின்னர் அடுத்தடுத்த கட்டங்களிலும் TCT மிகுதியான அறிவுரையும் பாதுகாப்பினையும் வழங்கியுள்ளது. 2000 பேருக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் கலந்துகொண்டனர் அவர்களில் 500 பேர் இலவச கண்புரை அறுவை சிகிச்சையும் இதய அறுவை சிகிச்சையும் இந்து மிஷன் மருத்துவமனையிலேயே கடந்த 2011 முதல் பயனடைந்துள்ளனர்.அவர்களே நமது திருமலை மருத்துவமனைக்கு உந்து சக்தியாக உள்ளனர்.

hindumissionhospital.in/

திரு. S. சந்தானம்
திரு. S. சந்தானம் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் இரசாயன உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அல்ட்ராமரைன் மற்றும் பிக்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், திருமலை கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள இவர் பல்வேறு சமூக வளர்ச்சித் திட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் சர்வதேச மனிதாபிமான இயக்கத்தின் ஒரு குழு உறுப்பினராவார், மேலும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர தன்னார்வ நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தின் மேம்பாட்டிற்குத் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மும்பையின் வடாலாவில் உள்ள சமூகத்தை அணிதிரட்டி, சுற்றுப்புறத்தை பசுமையாக்குவதற்குப் பொறுப்பாக இருந்தார். உயர்நிலைப் பள்ளி, என்.ஆர். சுவாமி வணிகவியல் கல்லூரி மற்றும் திருமலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை நிர்வகிக்கும் தென்னிந்திய நலச்சங்கத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் அச்சுத் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். இவர் திருமலை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆவார்.
ta_INதமிழ்