தி.அ.க. மிகுந்த நம்பிக்கையுடன் திருமலை மிஷன் மருத்துவமனையை (தி.மி.ம.) ஏப்ரல் 2010-இல் நிறுவியது - இது சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சேவை செய்யும் தரமான மருத்துவமனை. தி.அ.க. இதை ஒரு இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையின் மாதிரியாக செயல்படும் என்று நம்புகிறது, இது சாத்தியமான மற்றும், தரமான, நெறிமுறைகளுடன், எளிதாக அணுகக்கூடிய மற்றும் குறைந்த கட்டணத்தில் சுகாதார சேவையை வழங்குகிறது.
5 ஏக்கர் நிலப்பரப்பில் 30,000 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்ட இடத்துடன் கூடிய தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்ட விசாலமான, நன்கு காற்றோட்டமான கட்டிடத்தில் 50 படுக்கைகளுடன் இயங்குகிறது. இம்மருத்துவமனை சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் தரத்திற்கான அங்கீகாரம் பெற்றுள்ளது.
2009-ஆம் ஆண்டில் இராணிப்பேட்டை மற்றும் திருவலம் ஆகிய இடங்களில் புறநோயாளிகளுக்கான மருத்துவ மையங்களாக இது தொடங்கப்பட்டது.
தி.அ.க. சுமார் 10000 சதுர அடியில் 2010இல் தரை மற்றும் ஒரு மாடியில் தொடங்கியது. 2014-ஆம் ஆண்ற்குள் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தைச் சேர்த்து மேலும் 8000 சதுர அடியை சேர்த்தது. தரைத்தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் முதல் தளத்தில் நீரிழிவு நோய்க்கான புற நோயாளிகள் மையம், இரண்டாவது மாடியில் ஒரு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் மற்றும் மூன்றாவது மாடியில் ஒரு நிர்வாக அலுவலகம் ஆகியவற்றுடன் ஒரு புதிய தொகுதி 2014 மற்றும் 2019-க்கு இடையில் மேலும் 13000 சதுர அடியை சேர்த்தது. வாகன நிறுத்துமிடத்திற்கான வெளிப்புற வசதிகள் மற்றும் ஒரு தோட்டம் ஆகியவையும் உருவாக்கப்பட்டன. புற நோயாளி மற்றும் உள்நோயாளி பராமரிப்புக்குத் தேவையான அனைத்து மருத்துவ, மருத்துவம் அல்லாத மற்றும் அலுவலக உபகரணங்களும் கூட்டப்பட்டன.
மருத்துவமனையின் சிறப்பம்சங்களாக நல்ல மருத்துவ சேவைகள் மற்றும் தனித்துவமான சேவைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
2009 கட்டுமானத்தில் உள்ள TMH
TMH 2010
எலும்புப்புரை திரையிடல் செய்வதற்கும் கண்டறிவதற்கும் டி.எம்.எச் இல் டெக்ஸா ஸ்கேனர் உள்ளது.
EQAS - ஆய்வகம்
2011 முதல் ஒரு மருத்துவ அவசர ஊர்தி வசதி.
மருத்துவமனையில் முகாம்கள்
நோயாளிகளுக்கான போக்குவரத்து
TMH 2013
பெண்களில் புற்றுநோய் பரிசோதனை
என்.ஆர்.சுவாமி மையம் துவங்கியது
TMH 2015
மின்னணு மருத்துவ பதிவுகள்
ஆடியோ ஆய்வகம்
கவசம் திட்டம் துவக்கம்
நீரிழிவு மையம்
டயாலிசிஸ் வசதி தொடங்கப்பட்டது
TMH 2018
கோவிட் பராமரிப்பு
TMH 2020
நீரிழிவு முகாமில் பயன்படுத்தப்படும் நடமாடும் மருத்துவ வேன்
கிராமப்புற மையங்கள் 2021
பெண்களுக்கு மட்டுமான கால்பந்துப் பயிற்சி
TMH சுகாதார மையம்
மருத்துவமனை 2022
மருத்துவமனை அவசர சிகிச்சை, பொது மருத்துவம், பொது, அறுவை சிகிச்சை, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், குழந்தை மருத்துவம், எலும்பியல், காது மூக்கு தொண்டை, நுரையீரல், இருதய மருத்துவம், சிறுநீரகவியல் மற்றும் பல்மருத்துவம் ஆகியவற்றில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளி சேவைகளை வழங்குகிறது. இயன்முறை மருத்துவம் மற்றும் டயாலிசிஸ் சேவைகளும் வழங்கப்படுகின்றன. மருத்துவமனையின் ஆய்வகம் மற்றும் பரிசோதனை சேவைகள் நம்பகமான முடிவுகளை வழங்குகின்றன மற்றும் தர உத்தரவாதத்திற்காக வரையறுக்கப்படுகின்றன. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், எலும்புப்புரை, வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான சோதனை: தொற்றா நோய்களின் தடுப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றில் எங்கள் நிபுணத்துவம் நன்கு அறியப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பார்வையிடவும். http://tmh.health/
அனைத்து நோயாளிகளும் அவர்களின் சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் ஒரே அளவிலான கவனிப்புக்கு உரிமையுள்ளவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இது எங்கள் அனைத்து அலகுகள் மற்றும் துறைகளில் கண்கூடாக பார்க்க முடியும்.
திருமலை அறக்கட்டளை ஒரு மூடிய வளைய மாதிரியை அடிப்படையாகக் கொண்டுள்ளது, அதில் முதன்மை சுகாதாரம் மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த அணுகுமுறையில் செயல்படுத்தப்படுத்துகிறது. கிராமப்புற சமூகத்தில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர், பொதுவான சுகாதாரப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பரவல் மதிப்பிடப்பட வேண்டும். சமூகத்தின் தேவைகள் மற்றும் பிரதான சுகாதாரப் பிரச்சினைகளின் அடிப்படையில் சுகாதாரப் பராமரிப்பு மாதிரிகள் உருவாக்கப்பட வேண்டும். எங்கள் களப்பணியாளர்களுக்கு கிராமத்தில் அடிப்படை ஆரம்பப் பராமரிப்பை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது. நோயாளிக்கு தொடர் கவனிப்பு தேவைப்பட்டால், அவர்கள் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். எங்கள் களப்பணியாளர்கள் பின்னர் நோயாளியுடன் அவரது வீட்டிற்குச் சென்று, அவர்களை அவ்வபோது சந்தித்து, தேவையான மருந்துகள் எடுத்து கொள்வதையும், சரியான ஆலோசனையைப் பெறுவதையும் உறுதி செய்கிறார்கள். இறுதியாக, ஒரு முழு சுகாதார வளைய நிலையை அடைய அவர்கள் தொடர்ந்து நோயாளியைக் கண்காணித்து, தேவைப்பட்டால் தொடர் கவனப்பணி மூலம் மருத்துவ சேவைப் பெறுவதை ஊக்குவிக்கிறார்கள். இந்த தொடர் கவனப்பணி எங்கள் மருத்துவர்களுடன் பகிரப்பட்டு, நோயாளிகளை ஒழுங்காக கண்காணிக்க உதவுகிறது. தி.மி.ம-யில், நோயாளிகளைக் கண்டறிந்து, பின்தொடர்வதற்கு கிராமப்புறங்களில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு தங்கள் பகுதிகளில் வசிக்கும் குடும்ப நல தன்னார்வலர்களின் ஆதரவுடன், கிராமங்களில் கண்டுபிடிக்கும் நோயாளிகளுக்கு ஒரு தனித்துவமான வழிமுறையில் வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
தொற்று அல்லாத நோய்கள் (நீரிழிவு, இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், கீல்வாதம், முதுமை தொடர்பான குறைபாடுகள், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, வாய், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய், முதலியன) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இரண்டாம் நிலைஃமூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகயானவை; தொற்றக்கூடிய நோய்களை விட உயிரிழப்பு, உற்பத்தித்திறனை இழந்தல் மற்றும் மிகுந்த பணச் செலவுகள் ஆகியவற்றை விஞ்சுகின்ற காரணங்களாகும்.
எங்கள் திருமலை அறக்கட்டளைக்கு (தி.அ.க.) எங்கள் சமூகத்தின் முப்பது ஆண்டு கால சுகாதாரம் தேடுதலில் சாதனை படைத்துள்ளது. அதன் இரட்டை சுகாதார சேவை வழங்குநர் குழுக்களான சமூக சுகாதார சேவைகள் (சி.எச்.எஸ்) மற்றும் திருமலை மிஷன் மருத்துவமனை (தி.மி.ம) ஆகியவற்றைக் கொண்டு தற்சமயம் இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், மாறிவரும் நோயுற்ற நிலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், தற்போதுள்ள சுகாதார அமைப்பில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்யவும், அரசு பராமரிப்பு வழங்குநர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், எங்கள் சேவைகள் தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் 2010 ஆம் ஆண்டில் தி.மி.ம நிறுவியதிலிருந்து, தடுப்பு மற்றும் கவனிப்புடன் கூடுதலாக, நாங்கள் நேரடியாக தொற்று அல்லாத நோய்களின் கவனிப்பையும் வழங்கி வருகிறோம்.
மருத்துவமனையில் தொற்று அல்லாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான கவனிப்பை வழங்குகிறோம். சமூகத்தில் நிறுவப்பட்ட ஆரம்ப சுகாதார வழங்குநர்களின் சங்கிலித்தொடர் மூலம். இது இரண்டாம் நிலை சிக்கல்களைத் தடுக்கிறது நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைக்கிறது. தொற்று அல்லாத நோய் திட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான மக்களுக்கு நாங்கள் சேவை செய்துள்ளோம்.
தி.மி.ம 2014 முதல் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு அதிக மானிய வருடாந்திர தொகுப்பை வழங்குகிறது. ஆய்வகப் பரிசோதனைகள், சிக்கல்களுக்கான பரிசோதனைகள் மற்றும் மருத்துவரைப் பார்க்க ஆண்டுக்கு இரண்டு முறை திட்டமிடப்பட்ட வருகைகள் மூலம் பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் விரிவாகக் கவனிக்கப்படுகிறார்கள். நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் நிலைமைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து அறிவுறுத்தப்படுகிறார்கள், மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் உடல் சிகிச்சை ஆலோசனை வழங்கப்படுகிறது. அவர்களை ஒவ்வொரு மாதமும் களப்பணியாளர்கள் வீட்டிற்கு சென்று கண்காணிக்கிறார்கள். அத்தகைய வருகைகளின் போது, களப்பணியாளர்கள் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தில் ஏதேனும் அசாதாரண நிலை இருந்தால் மருத்துவருடன் பகிர்ந்து கொள்வார்கள், நோயாளிகளுக்குத் தேவையான உதவியைப் பெறவும் உதவி செய்கிறார்கள். இந்தத் தொடர்ச்சியான மற்றும் விரிவான பராமரிப்பு மாதிரி பெரும்பாலான நோயாளிகளுக்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைக்கு எலும்பினை "மென்மையாக்குதல்" என்று பொருள் (உண்மையில், எலும்பு "நுண்ணியது" எனவே உடையக்கூடியதாக மாறுகிறது) இது மூத்த குடிமக்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாகும். எலும்புப்புரை இருந்தால் தற்செயலாக விழுதல் அல்லது திடீர் அதிர்வு கூட எலும்புகளை சேதப்படுத்தும். எனவே, மாதவிடாய் நின்ற 5 ஆண்டுகளுக்குப் பிந்தைய பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் எலும்பு அடர்த்தியை மதிப்பிடுவது அவசியம். பிரச்சினை இருந்தால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இது முக்கியம். டெக்ஸா ஸ்கேன் என்பது எலும்பின் நிலையை மதிப்பிடுவதற்கு எங்கள் மருத்துவமனையின் சிறப்பு உபகரணங்களில் ஒன்றாகும். எங்கள் திட்டப் பகுதியை சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் மருத்துவமனையில் இலவச டெக்ஸா ஸ்கேன் எடுக்கப்பட்டு. அவர்களுக்கு எலும்புப்புரை அல்லது ஆஸ்டியோபீனியா இருந்தால், அவர்களின் நிலை மற்றும் சிகிச்சையின் தேவை குறித்தும், வைட்டமின் டி மற்றும் கால்சியம் மருந்து வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த மருந்துகள் அவர்களுக்கு அதிக மானியத்தில் அளிக்கப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு மாதமும் எங்கள் களப்பணியாளர்களால் இந்த மருந்துகள் அவர்களின் வீடுகளில் வழங்கப்படுகின்றன, அப்போது அலுவலர்களும் அவர்களின் நிலைமைகள் குறித்த விவரங்களை சேகரித்து மருத்துவரிடம் வழங்குகிறார்கள். எலும்பு முறிவு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் இயலாமையைத் தடுக்க இந்த எளிய, எளிதில் பின்பற்றக்கூடிய, தரப்படுத்தப்பட்ட சிகிச்சை நடைமுறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மருத்துவ மன்றங்களில் அங்கீகரிக்கப்பட்ட தி.மி.ம-யின் தனித்துவமான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டம் 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
பொது மக்களின் மனதில், உடல் பருமன் ஒரு உடல்நலப் பிரச்சினையாகக் கருதப்படுவதில்லை, இருப்பினும் மருத்துவ ரீதியாக இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய பிரச்சினைகள், மாதவிடாய் பிரச்சினைகள், மலட்டுத்தன்மை, கீல்வாதம், பக்கவாதம், தூக்கமின்மை, கண் கோளாறுகள் மற்றும் ஆண்மையின்மை உள்ளிட்ட பல நோய்களுடன் வலுவாக தொடர்புடையதாக அறியப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவு வகை உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை நமது சமூகத்தில் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாகின்றன. தி.மி.ம-இல் உள்ள நாங்கள் இதை ஒரு சமூக சுகாதார கவலையாக பாவித்து சமூகத்தின் ஒட்டுமொத்த சுகாதார நிலையை மேம்படுத்துவதற்காக கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாக ஏற்று செயல்பட்டு வருகிறோம். நாங்கள் கவனித்துக் கொள்ளும் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சையின் ஒரு முக்கியமான அம்சமாக இதை ஒருங்கிணைக்கிறோம். மருத்துவமனைக்கு வரும் எந்தவொரு பரிசோதனைக்கும் அனைவருக்கும் பி.எம்.ஐ குறிகாட்டியுடன் உடல் பருமனுக்காக மதிப்பிடப்படுகிறார்கள். வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு உணவுக் கல்வியும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய அவசியமும் வழங்கப்படுகிறது. உடல் பருமன் என்பது பள்ளிகளில் அவர்களுக்கு ஒரு கல்வித் தலைப்பு. உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து கல்வி, வழக்கமான உடற்பயிற்சி குறித்த ஆலோசனை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த ஆலோசனை ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். வாழ்நாள் முழுவதும் நிலையான கவனம் சிறந்த முடிவுகளைத் தருகிறது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது 2017-ஆம் ஆண்டிலிருந்து சமூகத்திற்கான தொடர்ச்சியான திட்டமாகும்.
2012 முதல் 2019 வரை பெண்களுக்குக் கருப்பை, வாய் மற்றும் மார்பகத்தில் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான நோய் சோதிப்பதற்கான எங்கள் முறை நன்கு நிறுவப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். 9000-க்கும் மேற்பட்ட பெண்கள் சோதிக்கப்பட்டனர் மற்றும் சாத்தியமான புண்களுடன் சந்தேகிக்கப்படுபவர்கள் தி.மி.ம-இல் விரிவாக சோதிக்கப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்டனர்
2017 முதல் 2019 வரை கிராமங்களில் 4000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புகையிலைப் பயனாளர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் இருவரும் இந்நிகழ்வில் பங்குபெற்றனர். சாத்தியமான புண்கள் உள்ளவர்களுக்கு பயாப்ஸி மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது நோய்க்குறியுடையவர்கள் புற்றுநோய்க்கு முந்தைய புண்கள் மற்றும் நிலைமைகள் உள்ளவர்களுக்கு பின்தொடர் பராமரிப்பு வழங்கப்பட்டது.
தி.மி.ம. அதன் பராமரிப்பு மாதிரியைச் செயல்படுத்த, முகாம்களில் கலந்து கொள்ளும் நோயாளிகளுக்கு ஒரு தனியான பராமரிப்பை வழங்குகிறது. இந்த சேவையில் உள்ள அனைத்துத் துறைகளும் மாதாந்திர அல்லது இருவார கால அடிப்படையில் மருத்துவமனையில் முகாம்களை நடத்துகின்றன. சிப்காட், சீகராஜபுரம் மற்றும் கீரைசத்து ஆகிய இடங்களில் உள்ள புறநோயாளிகள் சிகிச்சை மையங்களில் ஒரு சில துறைகள் முகாம்களை நடத்துகின்றன. இம்முகாம்களில் கண்டறியப்பட்ட நோயாளிகள் களப்பணியாளர்களால் பின்தொடரப்பட்டு, ஆலோசனை மற்றும் தேவையான சிகிச்சைக்காக அவர்கள் மீண்டும் பார்வையிடப்படுவதை உறுதி செய்யப்படுகிறது.
அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகாமில் பரிசோதனைக்குப் பிறகு,; தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குள் மீண்டும் அழைத்து வரப்படுகிறார்கள். அடுத்தடுத்த முகாம்களில் அவர்களுக்கான பின்தொடர் கவனிப்பு வழங்கப்படுகிறது.
திருமலை மிஷன் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு, 2015ஆம் ஆண்டு முதல் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவன நன்னெறிக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ் சமூக சுகாதார ஆராய்ச்சி மற்றும் தொற்றுநோயியல் ஆய்வுகளை மேற்கொள்கிறது. நீரிழிவு, எலும்புரை, பெண்களில் புற்றுநோய் மற்றும் எலும்புப்புரை பற்றிய சில ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன.