"வணிகத்தின் சமூகப் பொறுப்பு விருப்பமானது அல்ல, கட்டாயமான தாகும். எங்கள் நிறுவனர்கள் 1970 இல் இந்த நோக்கத்துடனும், அவர்கள் பணிபுரிந்த சமூகங்களை ஆதரிக்கும் நோக்குடனும், TCT ஐ உருவாக்கினர்,
திருமலை அறக்கட்டளை கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 50 ஆம் ஆண்டினை நிறைவு செய்தது.
மும்பையிலும் சென்னையிலும் உள்ள பிரபலமான நிறுவனங்களின் நிதி நல்கையின் மூலம் கல்வி மற்றும் சுகாதார செயல் திட்டங்களை TCT தொடக்க ஆண்டுகளில் செய்து வந்தது. 1983 இல் தனது சேவையை தமிழ்நாட்டில், வேலூரில் (அப்போது வட ஆற்காடு மாவட்டம்) திருவலத்தில் ஒரு மருத்துவ மையத்தை TCT தொடங்கியது. 1988 ஆம் ஆண்டில், இந்த அனுபவதின் மூலம் இந்த அறக்கட்டளை உள்ளூர் பெண் தன்னார்வளர்களைக் கொண்டு சமூக அடிப்படையிலான சுகாதார மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நிர்வகித்தது. இந்த அமைப்பு சமூகத்தின் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டங்கள் கிராமப்புற நிலைமையை மேம்படுத்த குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளது.
பல ஆண்டுகளாக கிராமப்புற மக்களுடன் கொண்டிருந்த நெருக்கமான ஈடுபாடு அவர்களின் வெவ்வேறு தேவைகளைப் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவியது. இந்தப் புரிதல் மற்றும் அப்பகுதியில் வளர்ந்து வரும் வேர்கள் மூலம், TCT.யின் திட்ட முன்வடிவில் (போர்ட்ஃபோலியோவில்) குடிப்பழக்கத்திலிருந்து விடுவிப்பு, பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் நுண்நிதியளிப்பு, கால்நடை பராமரிப்பு, ஆரம்ப சுகாதாரம் போன்றவற்றை உள்ளடக்கியதாக வளர்ந்தது.
திட்டங்கள் வளர வளர, எங்கள் திட்டங்களின் எல்லையும் விரிவடைந்தது. ஒரு கிராமத்தில் ஒரு மருத்துவ மையத்தில் தொடங்கி, TCT இப்போது ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் 1,60,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்கிறது. சில திட்டங்கள் வளர்ந்தவுடன், சமூகம் வளர்ச்சியடைந்து மாறியபோது சில திட்டங்கள் சிறிதாகியது. சமூகத்தில் அதன் ஆழமான வேர்களுடன், TCT அது வழங்கும் சேவைகள் அவசியமானவை மற்றும் தேவையற்றவை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
திருமலை மிஷன் மருத்துவமனை 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் மூலம், பல துறைகளில் தரமான வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதுடன், சமூகத்தில் உள்ள பல முக்கிய பிரச்சினைகளைப் பொருத்தமான திட்டங்களின் மூலம் நாம் தீர்க்க முடிகிறது. எமது ஐம்பதாண்டு அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கையில், பொறுப்புள்ள மற்றும் அறநெறி ரீதியான கவனிப்பு என்ற எமது தத்துவத்துடன் அவர்களின் தேவைகளைப் பொருத்துவதன் மூலம் சமூகத்திற்கான எமது சேவையைத் தொடர முடியும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம். எமது ஐம்பதாண்டு அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கையில், பொறுப்புள்ள மற்றும் அறநெறி ரீதியான கவனிப்பு என்ற எமது தத்துவத்துடன் அவர்களின் தேவைகளைப் பொருத்துவதன் மூலம் சமூகத்திற்கான எமது சேவையைத் தொடர முடியும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம்.