Commitment of TCT & Philosophy

Thirumalai Charity Trust – TCT was founded on the belief – “Social responsibility of business is not optional, but obligatory”. TCT was created in 1970 to promote education, provide medical relief to the rural poor and, in general, reach out to people in dire need. 

TCT., அதன் பொன்விழாவைக் கடந்து, அதன் அர்ப்பணிப்பு மற்றும் செயல்பாடுகள் வளர்ந்திருப்பதை நினைத்துப் பெருமிதம் கொள்கிறது… சமூக ஆரோக்கியம், கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், அடிமையாதல், இயலாமை மற்றும் பல சேவைத் துறைகளைத் தொட்டுள்ளது.

TCT

  • 1970ல் தொடங்கப்பட்டதிலிருந்து கல்வி பாரம்பரியத்தை தொடருதல், புதிய நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் ஆதரித்தல்
  • சமூக சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு சேவைகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதில் 1988 முதல் கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைத்தல்
  • 2010 முதல் எங்கள் திருமலை மிஷன் மருத்துவமனையில் (தி.மி.ம.) குறைந்த கட்டணத்தில் எளிதில் அணுக கூடிய மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்குதல்
  • என். ஆர். சுவாமி நூற்றாண்டு மறுவாழ்வு மற்றும் நலவாழ்வு மையத்தில் குடிநோய் மற்றும் பிற பழக்கங்களுக்கு அடிமையாதல், வளரிளம் பருவத்தினருக்கு நலக்கல்வி மற்றும் மன நோயாளிகளுக்கான சிகிச்சை ஆகிய விரிவான சேவைகளை 2014 முதல் வழங்கி வருதல்
  • திருமலை மிஷன் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி பிரிவு 2015 ஆம் ஆண்டிலிருந்து சமூகத்தில் பரவலாக நிலவும் பொதுவான உடல்நல பிரச்சனைகள் பற்றிய நுண்ணறிவு பெறுவதற்காக சமூக சுகாதார மற்றும் சமூகத்தில் பரவலாக உள்ள நோய்கள் குறித்த ஆராய்ச்சி ஆய்வுகளை நடத்தி வருதல்
  • நோயாளிகளின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் வசதிக்கேற்ப வீடுகளில் இணைய வழி, ஆலோசனை, நர்சிங் சேவை, பிசியோதெரபி, இரத்த மாதிரி சேகரிப்பு மருந்துகள் விநியோகம் போன்றவை தி.மி.ம-யில் வீட்டு பராமரிப்பு சேவைகளாக 2020 முதல் செயல்பட்டு வருதல்

TCT believes in the following:

  • Education is the most crucial element for a country’s progress
  • தன்னார்வத் தொண்டு, பெண்கள் மேம்பாடு, சமூகத்தின் முழு ஈடுபாடு ஆகியவை திட்டங்களின் வளர்ச்சிக்கு அவசியமாக திகழ்கிறது

Healthcare is a shared responsibility between the healthcare provider, patient, family and community and a holistic approach is necessary to enable the right care and treatment for the patient

திரு. S. சந்தானம்
திரு. S. சந்தானம் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் இரசாயன உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அல்ட்ராமரைன் மற்றும் பிக்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், திருமலை கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள இவர் பல்வேறு சமூக வளர்ச்சித் திட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் சர்வதேச மனிதாபிமான இயக்கத்தின் ஒரு குழு உறுப்பினராவார், மேலும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர தன்னார்வ நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தின் மேம்பாட்டிற்குத் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மும்பையின் வடாலாவில் உள்ள சமூகத்தை அணிதிரட்டி, சுற்றுப்புறத்தை பசுமையாக்குவதற்குப் பொறுப்பாக இருந்தார். உயர்நிலைப் பள்ளி, என்.ஆர். சுவாமி வணிகவியல் கல்லூரி மற்றும் திருமலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை நிர்வகிக்கும் தென்னிந்திய நலச்சங்கத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் அச்சுத் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். இவர் திருமலை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆவார்.
ta_INதமிழ்